அஜானா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

31

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி தயானந்தன் தனஜா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஜானா தனது பிறந்ததினத்தை தாயகத்தின் அம்பாறை மாவட்ட கல்முனைப் பிரதேசத்தில் உள்ள அன்னை இல்ல மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வி அஜானா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன்அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு. திருமதி தயானந்தன் குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். திரு.திருமதி தயானந்தன் தம்பதியினரின் அன்புச்செல்வியான அஜானா சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..21314321_1500686030000321_2314220597563155645_n 21371424_1500686036666987_4579322763826898381_n 21430184_1500685740000350_2405522225934715554_n 21557503_1500686116666979_2763102456485886791_n 21557603_1500686096666981_6215472212082469955_n