அனீஸ் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

20

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சுந்தரலிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் அனீஸ் தனது பிறந்த தினத்தை தாயகத்தின் மட்டக்களப்பு யோகசுவாமிகள் இல்லத்து மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன் போது மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று செல்வன் அனீஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களை நீடுழி காலம் வாழ வாழ்த்தி தமது ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்நன்நாளில் தாயக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுக்கும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் செல்வன் அனீஸ் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்!!28168825_1680015612067361_5088687174949777927_n 28377780_1680015505400705_259593807043238486_n 28378154_1680015588734030_2151308386501838496_n 28378525_1680015512067371_5686971579230554560_n 28378903_1680015692067353_622485043274034445_n 28468577_1680015508734038_3360180517144819757_n 28471338_1680015728734016_3522674848151835924_n 28471432_1680015615400694_659922515985410767_n