அன்பே சிவம் அமைப்பால் அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டது

245

சுவிஸ் சுரிச் அருள்மி சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பால் அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தையல் பயிற்சி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டது. இப்பயிற்சி நிலையத்திற்கு இன்று தையல் இயந்திரங்கள் வழங்கும் வைபவமும் அன்பேசிவம் விற்பனை நிலையத் திறப்பு விழாவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.மு.குமணன் அவர்களும் மற்றும் முன்னால் காரைதீவு பிரதேச தவிசாளர் செல்லையா இராசையா அவர்களும் மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரஜிதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சதா.ராஜன் மற்றும் கோளாவில் பிரதேச மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் கிருசாந்தன் அவர்களும் தையல்பயிற்சி நிலைய தலைவர் ஜெயாகர் மற்றும் உறுப்பினர்கள்இ ஆசிரியர்கள் பயிற்சி பெறுவோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் வடக்கு கிழக்கு இணைப்பாளர் திரு.மு.குமணன் அவர்களால் தையல் பயிற்சி நிலையத்திற்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.மு.குமணன் அவர்களால் சாகாமம் வீதிஇ கோளாவில் பிரதேசத்தில் அன்பேசிவம் விற்பனை நிலையமானது திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பங்குபற்றிய மக்கள் அன்பே சிவம் அமைப்புக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.1795584_788618211207110_5916212203352906235_n 10405426_788618767873721_2706798797080744237_n 10408761_788618607873737_4480470286872769354_n 10442983_788618557873742_7692367759253108772_n 10930089_788617844540480_4567676275003704889_n 10968441_788618624540402_6078796825858598237_n 10968554_788618464540418_7292303522249085385_n 10982473_788618671207064_1623308053400106890_n 10983423_788618291207102_7699607123302923071_n 10986991_788618081207123_2513032639612099431_n 10991373_788617847873813_5457568532446051299_n