அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

14

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் நினைவு தினத்தை தாயகத்தின் திருகோணமலை மூதூர் பாலத்தடிச்சேனை உள்ள உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்ல ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டுவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!27337136_1654145067987749_1904898115793623116_n 27459664_1654145317987724_3535649099383114379_n 27750608_1654145111321078_6862126817371884697_n 27752160_1654145167987739_3025244991294254606_n