அமரர் சண்முகானந்தன் யதுசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

17

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சண்முகானந்தன் யதுசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையும் 25வது பிறந்ததினத்தையும் தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது தாயகத்தின் அன்பே மன்னார் மாவட்ட வறிய மாணவர் குடும்பம் ஒன்றிற்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள் தொண்டர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் கலந்துகொண்ட அனைவரும் அமரர் யதுசன் அவர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்துக் கொண்டதுடன் உதவியினை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அமரர் யதுசன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் யதுசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைந்து மோட்சம் பெற நாமும் பிரார்த்திப்போம்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!30594189_1727945573941031_5754657075946848256_n 30594306_1727945587274363_2599801016312397824_n 30594822_1727945807274341_3094895365539758080_n 30624046_1727945813941007_1066593465116131328_n 30656583_1727945757274346_4057921277770334208_n 30688729_1727945610607694_4396239648427343872_n