அமரர் சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

22

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை திருகோணமலை சந்தணவெட்டை பிரதேச உறவுகளோடு அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இன்றைய தினம் (12.10.2017) நடைபெற்ற இந்நிகழ்வில் உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டதுடன் சந்தணவெட்டை பிரதேச்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கான கொட்டகையும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஆசிரியர்கள், ஊரமட்டத் தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். கடும் மழையிலும் எம் உறவுகளுக்கான உதவிக்கரம் கொடுக்கும் நிகழ்வை இடைநிறுத்தாது செயற்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் கணேசமூர்த்தி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வறிய மக்களின் இன்னல்களை போக்கிவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!22366466_1533173910084866_5690790448062949564_n 22405738_1533174520084805_6623815181261757151_n 22450069_1533173906751533_5449892734572134836_n 22491779_1533173913418199_7346929239251396521_n 22528270_1533174603418130_5083428386553882428_n