அமரர் சிறிஸ்கந்தவேள் விஜயமலர் அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

40

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சிறிஸ்கந்தவேள் விஜயமலர் அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு நாளை தாயகத்தின் திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஶ்ரீனிவாசபுரம் வறிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டதுடன் அமரர் சிறிஸ்கந்தவேள் விஜயமலர் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமைடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தாயக உறவுகளுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிய அவர்தம் குடும்பத்தினருக்கும், அன்பே சிவம் அமைப்பினருக்கும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமடைய அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!38954555_1891650510903869_8123567247496052736_n 39049697_1891650414237212_375649260026200064_n 39083005_1891650224237231_6324131690281172992_n 39099115_1891650337570553_598959294238425088_n