அமரர் சிவலை இலங்கையன் அவர்களின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

13

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சிவலை இலங்கையன் அவர்களின் 31ம் நாள் நினைவை தாயகத்தின் திருகோணமலை மூதூர் பெரியவெளி கிராமத்தில் உள்ள உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது அக்கிராமத்தில் உள்ள கதிரவேலு ஆலயத்தில் வைத்து உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்ல ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் இலங்கையன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வறிய மக்களின் இன்னல்களை போக்கிவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கு எம்மோடு கைகோர்த்து நிற்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் இன்றைய இந்நிகழ்வை எம்மோடு பகிர்ந்து உதவிகளை வழங்கிய திரு. இலங்கையன் குடும்பத்தினருக்கும் அன்பே சிவம் சார்பான எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு சூரிச் சிவன் அருளால் அமரர் திரு.இலங்கையன் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!25443170_1606265162775740_1324502957729286134_n 25498024_1606265172775739_5709730696355270186_n 25498374_1606264959442427_4915879731869997244_n 25508092_1606264966109093_986119223527970993_n 25550059_1606264962775760_4379433922108507962_n