அமரர் ராதாதேவிகா தியாகலிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

27

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் ராதாதேவிகா தியாகலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை
மட்டக்களப்பு யோகர்சுவாமிகள் இல்ல உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்ல ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் ராதாதேவிகா தியாகலிங்கம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வறிய மக்களின் இன்னல்களை போக்கிவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் ராதாதேவிகா தியாகலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!23032891_1556382824430641_8531228086421179631_n 23131722_1556382714430652_144035219688556171_n 23132044_1556382814430642_9044446693124119399_n 23167728_1556382827763974_2226161833769155243_n