அமரர் வாரித்தம்பி பரமநாதன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

84

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் வாரித்தம்பி பரமநாதன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தின் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பம் ஒன்றிற்கான சுயதொழில் ஊக்குவிப்பிற்காக புறொயிலர் கோழிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். உதவியை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அமரர் பரமநாதன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வறிய மக்களின் இன்னல்களை போக்கிவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் வாரித்தம்பி பரமநாதன் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!41446595_1933572026711717_2432394641497128960_n 41471233_1933572160045037_5297084858097467392_n 41562902_1933572150045038_1893562789163696128_n