அர்திகன் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

13

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி இராசேந்திரன் நிலூஸ்ஸா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்திகன் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வன் அர்திகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு. திருமதி இராசேந்திரன் குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். திரு.திருமதி இராசேந்திரன் நிலூஸ்ஸா தம்பதியினரின் அன்புச் செல்வமான அர்திகன் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்28471358_1685026274899628_784460746175854604_n 28575669_1685026191566303_6745056464869090392_n 28575859_1685026251566297_6306497910887786844_n 28575891_1685026481566274_6910874496387685930_n 28660497_1685026424899613_6690581911742978431_n 28661095_1685026061566316_394669783939312177_n 28684996_1685026518232937_8005222773013792776_n