ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் தமது அகவை நன்நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

16

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி சீலன் சுதா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் தமது அகவை நன்நாளை தாயகத்து உறவுகளுடனும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தாயகத்தின் திருகோணமலை கிளிவெட்டி பாரதிபுரம் மாணவர்களோடு கொண்டாடிய இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு, கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள், ஆசிரியர்கள், ஊர்மட்டத் தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்ததுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு. திருமதி சீலன் சுதா குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் அன்புச் செல்வங்களான ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..26169722_1624780904257499_3299625564070258662_n 26195503_1624780877590835_8809877856501554882_n 26195600_1624780734257516_6847940420043509078_n 26230341_1624780737590849_1296122930390872423_n 26731110_1624780744257515_3134195265215705235_n