சஞ்சீவன் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

31

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி வசந்தன் ரஜனி (சுவிஸ்) தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஞ்சீவன் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை சந்தணவெட்டை யாழினி முன்பள்ளி மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வன் சஞ்சீவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு. திருமதி வசந்தன் ரஜனி குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். திரு.திருமதி வசந்தன் ரஜனி தம்பதியினரின் அன்புச் செல்வனான சஞ்சீவன் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..21728408_1508159305919660_6803699214398642853_n (1) 21728408_1508159305919660_6803699214398642853_n 21740354_1508159179253006_230613751438847221_n 21743035_1508159245919666_3748264957596082452_n