சதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

18

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சபேசன் தரணிகா தம்பதிகளின் (ஜேர்மன்) செல்வப்புதல்வன் சதுர்சன் தனது முதலாவது பிறந்ததினத்தை தாயகத்தின் முகமாலை இளந்தென்றல் முன்பள்ளி மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வன் சதுர்சன் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்ததுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு.திருமதி சபேசன் தரணிகா குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திரு. திருமதி சபேசன் தரணிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சதுர்சன் அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..23319301_1560290107373246_5613508316119598472_n 23559833_1570404173028506_8208390350370258786_n 23561800_1570404373028486_794590263870767492_n 23621402_1570404123028511_4812439685437062172_n 23621682_1570404023028521_6895615541897982350_n 23621739_1570404166361840_3481438564102799767_n