சிவநேசன் (கரன்) தனது 30வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

24

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி பரமநாதன் சிவகாமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிவநேசன் (கரன்) தனது 30வது பிறந்ததினத்தை தாயகத்தின் அம்பாறை காரைதீவு சாரதா அன்னை இல்ல மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் செல்வன் சிவனேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் இவர்கள் போன்று மற்றவர்களும் தாயகத்தில் இன்னல்களை எதிர்நோக்கும் உறவுகளுக்கு தாமாக முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் இதுபோன்ற தாயக உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கோடு எந்நேரமும் செயற்படும் அன்பே சிவம் அமைப்பிற்கு தாம் எப்போதும் கடமைப்பட்டவர்களாகவே இருப்போம் என்றும் கூறி மனம் நெகிழ்ந்தனர். மேலும் செல்வன் சிவநேசன் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்ந்திட அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க.. வளமுடன்..21433208_1501049503297307_7693177663515510811_n 21462458_1501049699963954_3691076960052417574_n 21433208_1501049503297307_7693177663515510811_n - Copy 21371140_1501049496630641_2417022113369072256_n - Copy