அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி அமல்ராஜ் சுரேகா தம்பதிகளின் (கனடா) செல்வப்புதல்வி சிவாணி தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சி பிரதேசத்தின் கருணா இல்ல உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று செல்வி சிவாணி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். மேலும் இதன்மூலம் தம்மலான உதவிகளை தாயகத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையிட்டு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கும் நன்றிகளைக் கூறி அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். சூரிச் சிவன் அருளால் திரு. திருமதி அமல்ராஜ் சுரேகா தம்பதிகளின் புதல்வி சிவாணி வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்பாகவும் வாழ அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. வாழ்க.. வளமுடன்..