சுதாகரன் டெஷிதா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

37

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் சுதாகரன் டெஷிதா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது முகமாலை பளை பிரதேசத்தின் வறிய குடும்பம் ஒன்றிற்கான சுயதொழில் முயற்சிக்காக கோழிகள் வழங்கப்பட்டதோடு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பகுதியை சேர்ந்த வறிய குடும்பம் ஒன்றிற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஊர்மட்டத் தலைவர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். உதவிகளை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் தம்பதியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் ஆசீர்வாதங்களையும் வழங்கினர். மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தாயக உறவுகளுக்கு உதவிகளை வழங்க தாமாக முன்வந்து முன்னுதாரணமாக செயற்பட்ட அவரது நண்பர்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொண்ட உறவுகள் அனைவரையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதுபோன்ற உதவிகளை தாயகத்து உறவுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அன்பே சிவம் அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் இன்று திருமண பந்தத்தில் இணையும் திரு. திருமதி சுதாகரன் டெஷிதா தம்பதியினர் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!40414475_1921860151216238_735077742835400704_n 40417682_1921860227882897_6942921509950193664_n 40432706_1921859967882923_1172937418005807104_n (1) 40432706_1921859967882923_1172937418005807104_n 40440868_1921860174549569_8002386613550186496_n 40441125_1921860077882912_880473939267026944_n