அன்பே சிவம் அமைப்பின் ஊடாக தபேசன் சுவாதி அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் மூதூர் பெரியவெளி முதியோர் இல்ல உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் வன்னி முத்தையன்காட்டுப் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கான கண் சிகிச்சைக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்த்தக்கது. மூதூர் பெரியவெளியில் நடைபெற்ற நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள், ஊர்மட்டத்தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் சுவாதி அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இங்கு உரையாற்றிய இல்லத்து ஆசிரியர்கள் அவர்கள் தபேசன் சுவாதி குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தபேசன் சுவாதி அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..