திருமதி வனஜா வழங்கிய உதவிகள்

20

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அன்புக்கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சூரிச் அப்பாச்சாமி கல்வி நிலைய ஆசிரியை திருமதி வனஜா அவர்களின் உதவிக்கரத்தோடு திருகோணமலை சந்தணவெட்டை யாழினி முன்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் உணவுப்பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்துகொண்ட அனைவரும் சூரிச் சேபார்க் அப்பாச்சாமி கல்வி நிலையத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்கள் பணி மென்மேலும் தொடர வேண்டுமெனவும் கூறி நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதனை ஒழுங்குசெய்த அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடும் மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.21768015_1519350931467164_5487353690890131143_n 21992817_1519350854800505_4067051624521220570_o 22045854_1519350851467172_3300505476513439308_n 22046521_1519351018133822_4353831618483457301_n 22046698_1519350924800498_8527097944905286405_n