திருமதி வனஜா அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

18

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அப்பாச்சாமி கல்வி நிலைய ஆசிரியை திருமதி வனஜா அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை மூதூர் முன்னப்போடிவெட்டை கிராம உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் திருமதி வனஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்ததுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இங்கு உரையாற்றிய ஊர்மட்டத்தலைவர்கள் அவர்கள் திருமதி வனஜா குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திருமதி வனஜா அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..26001222_1614948645240725_4369269799104332318_n 26055572_1614948778574045_89127628184976041_n 26166220_1614948641907392_5324776154875975705_n 26167628_1614948781907378_1635513469493245302_n