திரு. இராஜேஸ்வரன் அவர்களின் 82வது பிறந்ததின நினைவுநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

16

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் திரு. இராஜேஸ்வரன் அவர்களின் 82வது பிறந்ததின நினைவுநாளை தாயகத்தின் பல பிரதேசங்களில் உள்ள உறவுகளுடன் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் திருகோணமலை மூதூர் பெரியவெளி பாலர்பாடசாலையில் உள்ள 46 மாணவர்களுடனும், மூதூர் மணற்சேனை இருதயபுரம் பாலர்பாடசாலையிள் உள்ள 26 மாணவர்களுடனும் மட்டக்களப்பு யோகர்சுவாமிகள் இல்ல உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்ல ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் திரு. இராஜேஸ்வரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வறிய மக்களின் இன்னல்களை போக்கிவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கு எம்மோடு கைகோர்த்து நிற்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் இன்றைய இந்நிகழ்வை எம்மோடு பகிர்ந்து உதவிகளை வழங்கிய திரு. இராஜேஸ்வரன் குடும்பத்தினருக்கும் அன்பே சிவம் சார்பான எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு சூரிச் சிவன் அருளால் அமரர் திரு.இராஜேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!23621700_1572424359493154_1158445264078228370_n 23621706_1572423962826527_2810256278168684937_n 23622079_1572423739493216_5929289456842958943_n 23622188_1572423746159882_3008080723341683322_n