திரு.கணபதிப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் தனது 52வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

20

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.கணபதிப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் தனது 52வது பிறந்ததினத்தை தாயகத்தின் மட்டக்களப்பு முதியோர் இல்ல உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் திரு.கணபதிப்பிள்ளை சிவகுமாரன் மகிழ்ந்ததுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு.கணபதிப்பிள்ளை சிவகுமாரன் குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திரு.கணபதிப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்….24862149_1594897663912490_9047684668476641174_n 24899759_1594897477245842_704619151324946357_n 24909532_1594897313912525_98520401959742223_n 24993161_1594897587245831_2894425441105977500_n