திரு. திருமதி சிறிமோனறஞ்சன் பிறேமலா தம்பதீயனர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

15

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சிறிமோனறஞ்சன் (பிரித்தானியா) பிறேமலா (இலங்கை) தம்பதீயனர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது தாயகத்தின் அன்பே சிவம் சிவபுர வளாகத்தில் வைத்து வறிய குடுமபம் ஒன்றிற்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவும், வறிய மாணவர் குடும்பம் ஒன்றிற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள் தொண்டர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் கலந்துகொண்ட அனைவரும் திரு.திருமதி சிறிமோகனறஞ்சன் பிறேமலா தம்பதியனருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களை நீடுழி காலம் வாழ வாழ்த்தி தமது ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்நன்நாளில் தாயக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுக்கும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து ஏனையவர்களுக்கும் முன்னுதாரணமாய் விளங்கும் அவர்தம் நண்பர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்தும் இது போன்ற நல்ல செயற்றிட்டங்களுக்கு தாமாக முன்வந்து செயற்படும் நண்பர்கள் குழாமிற்கு அன்பே சிவம் சர்பான எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் சூரிச் சிவன் அருளால் திரு.திருமதி சிறிமோகனறஞ்சன் பிறேமலா தம்பதியனர் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்!!30127704_1723397984395790_3783987228544335872_n 30127760_1723398204395768_5092159435690737664_n 30221331_1723398127729109_6244022007520821248_n 30226152_1723398161062439_3973763399354941440_n 30264900_1723398321062423_2106345042489638912_n 30414628_1723398027729119_798017860038295552_n 30415568_1723397964395792_8968633596633939968_n