திரு. திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

40

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சி அக்கரையான்குள வறிய குடும்ப மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள் தொண்டர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் கலந்துகொண்ட அனைவரும் திரு.திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியனருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களை நீடுழி காலம் வாழ வாழ்த்தி தமது ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்தும் இது போன்ற நல்ல செயற்றிட்டங்களுக்கு தாமாக முன்வந்து செயற்படும் புலம்பெயர் உறவுகளுக்கு அன்பே சிவம் சர்பான எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் சூரிச் சிவன் அருளால் திரு.திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியனர் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்!!40413626_1921851911217062_3950031317042724864_n 40417659_1921852557883664_2242453797345427456_n 40435604_1921852574550329_2839300289796767744_n