திரு. திருமதி நீதிமதி சுந்தரமூர்த்தி அவர்கள் பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

14

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி நீதிமதி சுந்தரமூர்த்தி அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை சந்தணவெட்டை யாழினி முன்பள்ளி மாணவர்களோடும், மட்டக்களப்பு வாகரை அன்பேசிவம் மாலைநேர இலவசக்கல்வி நிலைய மாணவர்களோடும் கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் சிற்றுண்டி வகைகள் என்பன வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் இல்லத்து ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் திரு. திருமதி நீதிமதி சுந்தரமூர்த்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் திரு. திருமதி நீதிமதி சுந்தரமூர்த்தி குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். திரு. திருமதி நீதிமதி சுந்தரமூர்த்தி அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்….22894437_1553290598073197_377343434906573475_n 23031326_1553290808073176_3900191884340027317_n 23031337_1553290714739852_2034442236486599949_n 23167986_1553290594739864_6251620539192512630_n