திலீபன் நிரோஜா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

15

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் திலீபன் நிரோஜா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது நெடுங்கேணி வெள்ளடிப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமமொன்றின் வறிய மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்களும், மதிய உணவும் வழங்கப்பட்டதுடன் வறிய குடும்பம் ஒன்றிற்கான சுயதொழில் முயற்சிக்காக ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஊர்மட்டத் தலைவர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் இவர்கள் போன்று மற்றைய புலம்பெயர் உறவுகளும் தாயகத்தில் இன்னலுறும் உறவுகளுக்கு உதவிகளை முன்வந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும் இதுபோன்ற உதவிகளை தாயகத்து உறவுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அன்பே சிவம் அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் இன்று திருமண பந்தத்தில் இணையும் திரு. திருமதி திலீபன் நிரோஜா தம்பதியினர் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!27332405_1654153854653537_5279337880716596154_n 27332702_1654153387986917_9082487756384128501_n 27336726_1654154024653520_9219207415776553361_n 27337085_1654153434653579_2849384711932930121_n 27655046_1654153824653540_749990368482574562_n