நிசாந் வேணுஜினி அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

62

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக கனடா நாட்டைச் சேர்ந்த நிசாந் வேணுஜினி அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். தாயகத்தின் காரைதீவு இராமகிருஷ்ணன் சாரதா பெண்கள் இல்ல மாணவர்களோடு இதனைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவும், இரு வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் நிசாந் வேணுஜினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரைப் போல் மற்றைய புலம்பெயர் உறவுகளும் தாமாக முன்வந்து தாயகத்தில் வறுமையால் இன்னலுறும் உறவுகளுக்கு உதவிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும் சூரிச்சிவன் அருளால் நிசாந் வேணுஜினி அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!41413791_1934175706651349_8262026792571764736_n 41429357_1934175489984704_1729921691917746176_n 41437010_1934175536651366_6204948417991409664_n 41442515_1934175663318020_6223517232354295808_n 41467992_1934175409984712_4437271000014389248_n 41558895_1934175313318055_2364537216237043712_n