பரமநாதன் சிவநேசன் அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

34

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக பரமநாதன் சிவநேசன் அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். தாயகத்தின் காரைதீவு இராமகிருஷ்ணன் சாரதா பெண்கள் இல்ல மாணவர்களோடு இதனைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்ட இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் பரமநாதன் சிவநேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரைப் போல் மற்றைய புலம்பெயர் உறவுகளும் தாமாக முன்வந்து தாயகத்தில் வறுமையால் இன்னலுறும் உறவுகளுக்கு உதவிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும் சூரிச்சிவன் அருளால் பரமநாதன் சிவநேசன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!40987241_1929226063812980_6726727905834958848_n 41079359_1929226143812972_5983320262907527168_n 41099238_1929225913812995_1473876525076971520_n 41197475_1929225920479661_6103676842953146368_n 41222143_1929226190479634_4294619081526476800_n