பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தின் பின்தங்கிய குடியேற்ற கிராமமான திருமால் புரத்தில் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

114

அன்பே சிவம் அமைப்பானது தாயகத்தின் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தின் பின்தங்கிய குடியேற்ற கிராமமான திருமால் புரத்தில் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இக்கற்றல் உபகரணங்களை வழங்க நிதர்சன், சகானா, கோபிகா ஆகியோரின் குடும்பத்தினர் முன்வந்து அனுசரனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அன்பேசிவம் இணைப்பாளர் குமணன், கிராம அலுவலர் யோகநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் கிருபாகரன், மாதர் சங்க பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய இவர்கள் இச்செயற்றிட்டத்தின் ஆரம்பநிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய நிதர்சன், சகானா, கோபிகா ஆகியோரின் குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இது போன்ற நல்ல செயற்றிட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்தவுள்ள அன்பே சிவம அமைப்பினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இச்செயற்றிட்டத்தின் ஆரம்பநிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய குடும்பத்தினர் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க.. வளமுடன்..

2771_935890229813240_2948161784512970457_n

9855_935890336479896_5215331273064738955_n

10275_935890689813194_148334236092953380_n

60033_935890353146561_6501468475191349140_n

230385_935890043146592_6829801412750418717_n

535354_935890159813247_790513346366158891_n

580390_935890156479914_869118190316006694_n

941009_935890039813259_4296267629805637553_n

971272_935890683146528_3386615487248345465_n

1450716_935890046479925_4768900810969431648_n

1450726_935890489813214_1723896532209665891_n

1656310_935890576479872_4282747849084217594_n

1916622_935890816479848_2658539361915754085_n

1917071_935890226479907_6384625764633404580_n

1936494_935890493146547_4864930519477882172_n

10320475_935890583146538_3444312510755870921_n

10322790_935890586479871_3123112021271146082_n

10374876_935890343146562_4632945065753767784_n

10392035_935890806479849_997273627177041994_n

10433102_935890216479908_1010235206838599521_n

10492204_935890143146582_3864313800561160791_n

10599165_935890693146527_2888475048463133614_n

11165243_935890813146515_3334138793778103330_n