பிறேமிதா தனது 7வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

33

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி பிறேம்குமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி பிறேமிதா தனது 7வது பிறந்ததினத்தை தாயக மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் சேர்ந்து செல்வி பிறேமிதா அவர்களிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவரை நீடுழி காலம் வாழவும் வாழ்த்தினர். மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர்கள் அவர்கள் இது போன்று உதவி செய்யும் புலம்பெயர் உறவுகளால்தான் தாயகத்தில் இன்னல்களை எதிர்நோக்கும் எமது உறவுகள் ஆறுதல் அடைந்து வருவதாகவும் மாணவர்கள் கல்விநிலையில் முன்னேற்றம் காண்பதாகவும் கூறி திரு.திருமதி பிறேம்குமார் குடும்பத்தினருக்கு தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எம்மோடு தொடர்ந்தும் நீண்ட காலமாக இதுபோன்ற உதவிகளுக்கு தாமாக முனவந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் செல்வி பிறேமிதா சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க… வளமுடன்….38012347_1875959069139680_7008781741057900544_n 38265839_1875959299139657_630648950222749696_n 38274508_1875959475806306_8655117601254408192_n 38297844_1875959242472996_3337511990712074240_n 38298049_1875959182473002_2575107771858944_n