மஞ்சரி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

34

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சசிகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி மஞ்சரி தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் யாழ்ப்பாணம் பொலிகண்டியை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கான சுயதொழில் ஊக்குவிப்பிற்காக மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் உதவிகளை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் செல்வி மஞ்சரி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் திரு. திருமதி சசிகரன் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திரு. திருமதி சசிகரன் தம்பதியினரின் புதல்வி மஞ்சரி சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!32076546_1756774331058155_2025106788352786432_n 32087369_1756774304391491_2141937157298716672_n 32089869_1756774194391502_36454570011918336_n 32089962_1756774297724825_1420764409738821632_n