அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

49

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக
அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது தாயகத்தின் கல்முனை புனிதமரியாள் ஆண்கள் இல்லத்திற்கு மூன்று வேளை உணவும் மற்றும் காரைதீவு இராமகிருஷ்ணன் சாரதா பெண்கள் இல்லம் மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஊர்மட்டப் பெரியோர்கள் போன்றோர் கலந்துகொண்டதுடன் அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமைடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தாயக உறவுகளுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிய அவர்தம் குடுமபத்தினருக்கும், அன்பே சிவம் அமைப்பினருக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமடைய அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!40632376_1925568434178743_5521567946662477824_n 40648951_1925568554178731_6331488569827262464_n 40652595_1925568280845425_4100846048509952000_n 40656187_1925568377512082_2012072898344255488_n 40671510_1925568367512083_8477235513441386496_n 40987241_1929226063812980_6726727905834958848_n