வேணுப்ரியா (ப்ரியா) தனது 19வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

16

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி யோகநாயகம் அருந்தவராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி வேணுப்ரியா (ப்ரியா) தனது 19வது பிறந்ததினத்தை 28.01.2018 அன்று தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சியில் உள்ள அரசினர் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் அமைப்பின் இணைப்பாளர்கள்ää தொண்டர்கள், பாடசாலை ஆசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று செல்வி ப்ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஆசிரியர் திரு. திருமதி யோகநாயகம் அருந்தவராணி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் புலம்பெயர்ந்து வாழும் ஏனைய உறவுகள் அனைவரும் இவர்களைப் போன்று உதவிசெய்து எமது தாயகப்பகுதிகளில் வறுமையால் இன்னல்ப்படும் மாணவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்று செயற்பாடுகளைத் தொடர்ந்தும் வழங்கிவரும் அன்பேசிவம் அமைப்பினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களது செயற்பாடு மேன்மேலும் வளரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் திரு. திருமதி யோகநாயகம் அருந்தவராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி வேணுப்ரியா (ப்ரியா) சூரிச்சிவன் அருளால் வாழ்வில் எல்லா சீரும் சிறப்பும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!27072361_1649782981757291_6294629783745327977_n 27072467_1649782985090624_4695179535011367217_n 27072514_1649783105090612_6790143834169784847_n 27332116_1649783078423948_2124951308513482934_n 27540053_1649783185090604_417600500270872995_n 27545194_1649782988423957_196960133206647481_n