ஹரிணி துளசி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

13

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக செல்வப்புதல்வி ஹரிணி துளசி தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை மல்லிகைத்தீவுப் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதன் போது அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் பாடசாலை ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்ட அனைவரும் செல்வி ஹரிணி துளசி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் செல்வி ஹரிணி துளசி குடும்பத்தினருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துகொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். செல்வி ஹரிணி துளசி அவர்கள் சூரிச் சிவன் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க…. வளமுடன்…..30710735_1731767860225469_9079872721319362560_n 30713909_1731767863558802_3654656662226075648_n 30724310_1731768186892103_4897711646132142080_n 30724896_1731768023558786_7267591977779068928_n 30739165_1731767846892137_2153808859221721088_n 30742391_1731768173558771_2237340174923071488_n