அமரர் தம்பிப்பிள்ளை இராசையா அவர்களின் 15வது ஆண்டு நினைவு தின மதிய உணவு வழங்கும் நிகழ்வு

72

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் தம்பிப்பிள்ளை இராசையா அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்து உறவுகளோடு கொண்டாடினார். இதன்போது தாயகத்தின் யாழ்ப்பாணம் அச்சுவேலி திருக்கன்னியர்மட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர் குமணன், திருக்கன்னியர் மட ஆசிரியைகள், அருட்சகோதரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் எல்லோரும் எழுந்து நின்று அமரர் இராசையாவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தனர். மேலும் அருட்சகோதரி அவ்ரகள் தமது திருக்கன்னியர் மட மாணவர்கள் சார்பாகவும், தாயகத்து உறவுகள் சார்பாகவும் அன்னாரின் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் தொரடந்தும் பல காலமாக எம்மோடு இணைந்து இது போன்ற உதவிகளை கேட்காமலே தாமாக முன்வந்து செய்து கொண்டிருக்கும் அன்பே சிவம் அமைப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்து அவர்களது செயற்பாடு வளம்பெற வாழ்த்தினார். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் தம்பிப்பிள்ளை இராசையா அவர்களின் சாந்தி பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது.

13445677_1037970989605163_8393956962341639347_n 13406774_1037971082938487_5925769261690616000_n 13442162_1037971072938488_2893156473640300559_n 13432381_1037970992938496_6605476305505832134_n