ஆதித்யன் தனது 13வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

17

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி நந்தகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதித்யன் தனது 13வது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் பாலர் பாடசாலை ஒன்றிற்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று செல்வன் ஆதித்யன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் திரு. திருமதி நந்தகுமார் தம்பதியினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு இதுபோன்ற புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் அன்பே சிவம் அமைப்பினருக்கும் நன்றிகளைக் கூறி அவர்களது செயற்பாடு மென்மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். சூரிச் சிவன் அருளால் திரு. திருமதி நந்தகுமார் தம்பதிகளின் புதல்வன் ஆதித்யன் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சீரும் சிறப்பாகவும் வாழ அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. வாழ்க.. வளமுடன்..29543064_1713611608707761_4004076815005085435_n 29572417_1713611428707779_65774116014553795_n 29572752_1713611448707777_1052046505574504937_n 29573389_1713611775374411_8158383630080313799_n 29695414_1713611432041112_6247967453316787315_n