தைத்திருநாளை அன்பே சிவம் அமைப்பின் ஊடாக தாயகத்து உறவுகளுடன் திரு.திருமதி தனஞ்சயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்சயா அவர்கள் கொண்டாடினார்.

233

தைத்திருநாளை அன்பே சிவம் அமைப்பின் ஊடாக தாயகத்து உறவுகளுடன் திரு.திருமதி தனஞ்சயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்சயா அவர்கள் கொண்டாடினார். இதன் போது தாயகத்தின் திருகோணமலை மணற்சேனை விபுலானந்த வித்தியாலய முன்பள்ளி மாணவர்களுக்கான கன்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பத்மநாதன், மணற்சேனை சனசமூக ஒன்றியத் தலைவர் யோகராஜா, தங்கமுருகன் ஆலயச் செயலாளர் திருக்கேதீஸ்வரன், அன்பேசிவம் தொண்டர் நாகராசா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றிய அதிபர் அவர்கள் திரு.திருமதி தனஞ்சயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்சயா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் பாடசாலை சார்பாக அவரது குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இதுபோன்று தொடர்ந்தும் தாயகத்தின் உறவுகளுக்கான உதவிக்கரம் திட்டத்தின் உதவிகளை செய்துகொண’டிருக்கும் அன்பேசிவம் அமைப்பிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் திரு.திருமதி தனஞ்சயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்சயா அவர்களும் அவரது குடும்பமும் சூரிச் சிவன் அருளால் நீடுழி காலம் வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க வளமுடன்..

1 122 12222 12333 12222222 1111111111111111