செல்வி வீனா அவர்களின் 03வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்

31

கடந்த 2014.08.23ம் திகதியன்று கல்முனைப்பிரதேச மணற்சேனைக்கிராமத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தா வித்தியாலய பாடசாலையில் உதயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி உ.வீனா அவர்களின் 03வது பிறந்தநாளை முன்னிட்டு இப்பிரதேச வறிய மாணவர்கள் 150 பேரிற்கான கற்றல் உபகரணங்களும் எமது மாலை நேர இலவச கல்வி நிலையத்திற்கான கற்பித்தல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேலும் உ.வீனா குடும்பத்தினரின் குடி நீர் கிணறு ஒன்றினை அமைப்பதற்கான நிதி உதவி கிடைத்துள்ளது சிறப்பம்சமாகும்ää உண்மையிலே இவ்விரு உதவிகளும் எமக்கு சரியான நேரத்தில் மிகமுக்கியமான எமது தேவையான குடிநீர்ää கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் என்பன இந்த நேரத்தில் எமக்கு கிடைத்த கொடையாகவே கருதுகின்றோம். அந்தவகையில் எமது ககோதரி உ.வீனா அவர்களுக்கு எமது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மற்றும் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அண்ணன் கலையரசன் அவர்களும்ää சிறப்பு அதிதியாக அதிபர்.ம.வரதராஜன்ää ஆலயத்தலைவர் ஆ.மனோகரன் ஆசிரியர் மு.வேணுஜா அவர்களுடன் மாணவ பெற்றோர்களும் கலந்து இன் நிகழ்வினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மதிப்பிற்குரிய கலையரசன் அவர்கள் இந்த அன்பே சிவம் அமைப்பானது புலம் பெயர் வாழ் தமிழ் மக்களாகிய எமது இனிய உறவுகளின் உதவியோடு வறிய மாணவர்களுக்கான மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புää குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை மிகவும் சிறப்பாகவும் நேர்மையாகவும் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள்ää அதனோடு இது போன்ற பணிகளை தொடர உறுதியான தூண்களாக கைகோர்த்து உதவும் கரங்களாகிய எமது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவிக்கின்றேன் எனவும்ää சகோதரி உ.வீனா அவர்களால் சகல சௌபாக்கியத்தோடு வாழவேண்டி தனது சாhபாவும் எமது அதிதிகள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்தினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் எமது மாணவää ஆசிரியர்கள்ää அதிதிகளின் வீனாவிற்கான பிறந்தநாள் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.10384590_700607626674836_2663040369266355694_n 10417616_700607796674819_1385763297406425343_n 10559807_700607816674817_1388312160671623396_n